சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 10 மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய முகாமைத்துவ பீடம் இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த 06ம் திகதி முகாமைத்துவ பீட மாணவர்களால் முதலாம் வருட மாணவர்கள் மனிதாபிமான மற்ற முறையில் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரால் கவனிக்கப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட மாணவர்களும் இதனை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனால் இந்த மாணவர்கள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்த விரிவுரையாளர்கள் 2ம் வருட மாணவர்களுக்கான விரிவுரையை நேற்று பகிஷ்கரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணைகளின் படி, குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் வழங்கப்பட வேண்டிய தண்டனை தொடர்பில் ஒழுக்காற்றுக் குழுவே தீர்மானிக்கும் எனவும் உபவேந்தர் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக