ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவையாக போட்டியிட முடியும் என்று பிரதமர் டி.எம்.ஜெயரத்ன தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்துக்கு ஊடாக கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு அமைய இது சாத்தியம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது இந்த தகவலை வெளியிட்டார்.
இதன்போது 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமையை உறுதிப்படுத்தினார்.
இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிடுவதற்காக சட்டங்களின் உதவி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை பிரதமர் ஆட்சியின் கீழ் நாட்டை நடத்திச்செல்வது கடினமான பணியாகும்.
எனவே நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர வேண்டும் என்றும் ஜயரட்ன கருத்துரைத்தார்.
இலங்கையில் முன்னர் பல சிறந்த தலைவர்கள் இருந்தபோதும் தற்போதைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே சிறந்த தலைவர் என்று பிரமர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக