புதன், 29 அக்டோபர், 2014

மன்னன் இராவணனிடம் விமானம் இருக்கவில்லை இலங்கை அகழ்வாராட்சி திணைக்களம்..!!!!

மன்னன் இராவணனிடம் விமானங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுவதை உறுதி செய்யும் சாட்சியங்கள் இல்லை என்று இலங்கையின் அகழ்வாராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது திணைக்களத்தின் தலைவர் செனரத் திஸாநாயக்க இந்த தகவலை வெளியிட்டார்.

இராவணன் 300ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவரிடம் விமானங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் இருந்ததாகவும் கதைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனை உறுதிப்படுத்தக்கூடிய சாட்சியங்கள் எதனையும் கண்டறியமுடியவில்லை என்று திஸாநாயக்க தெரிவித்தார்.


கம்பராமாண கதைகளின்படி இராவணனன் புட்பக விமானத்தை பயன்படுத்தியே சீதையை கடத்திச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக