பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
வட பகுதியிலிருந்து இராணுவத்தினரை நீக்குமாறு கமலேஸ் சர்மா கோரியிருந்தார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டுமென்ற யோசனையை தமிழ் அரசியல்வாதிகள், கமலேஸ் சர்மாவிடம் முன்வைத்துள்ளனர்.
வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், வட மாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் குருகுலராசா ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், புலிகளை வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றிக்கொள்வது ஆபத்தானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித நெகிழ்வுப்போக்கையும் காட்டாது என குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வட மாகாணசபையும் முயற்சித்து வருகின்றமை குறித்த தகவல்கள், அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக