கோயில்குளம் இளைஞர் கழகத்தின் ஆண்டு நிறைவை ஒட்டி கழகத்தின் ஸ்தாபகர் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்பில் ஆண்டு நிறைவை ஒட்டிய சமூகப்பணிகள் கழகத்தினால் திட்டமிடப்பட்டு செயற்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த ஆண்டில் கல்வி, கலை, கலாசார, பொருளாதார மேம்பாட்டில் சமூகத்திற்கான உன்னத சேவைகளை வழங்கிய
கோயில்குளம் இளைஞர் கழகம் தற்பொழுது ஆண்டு நிறைவையொட்டி பல சமூகப்பணிகளை கடந்த வருடம் போல இவ் வருடமும் மேற்கொள்ளவுள்ளது.
திட்டமிடப்பட்ட எமது பணிகளின் ஆரம்ப நிகழ்வாக நேற்று (29.10.2014) கோயில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதவுமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஐயா அவர்களினால் கழகத்தின் அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்படுள்ளது.
அந்த வகையில் வன்னி மண்ணில் குறும்படம், கவிதை, விமர்சனம், உட்பட பல்வேறு கலைத்துறையில் பணியாற்றி வரும் சு.வரதகுமார் அவர்களின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் முழுநீள திரைப்படமான ''பூவிழிடொட்கொம்'' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான ஒரு தொகைப்பணம் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து கலைத்துறை சம்பந்தமான கழகத்தின் கலந்துரையாடலில் ஆண்டு நிறைவு சமூகப்பணி செயற்குழு உறுப்பினர்களான கழகத்தின் தலைவர் காண்டீபன், பொருளாளர் நிகேதன், உப செயலாளர் கேசவன், நிர்வாக சபை உறுப்பினர்களான பிரதீபன், யசி, சுரேஷ், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய ஸ்தாபகர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஐயா,
எமது கழகமானது கடந்த ஆண்டில் 08 குறும்படங்கள், 06 ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடல்கள், கழகத்தின் தேசிய பாடல் ஆகியவற்றை வெளியிட்டு இருந்ததுடன் நோர்வே நாட்டில் நடைபெற்ற குறுந்திரைப்பட விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த பாடலுக்கான விருதை சர்வதேச அரங்கில் தட்டிச்சென்றமை கழகத்தின் கலைத்துறைக்கு கிடைத்த வெற்றியென கழகத்தின் ஸ்தாபகர் தெரிவித்தார்.
எமது கழகம் வன்னியின் கலைத்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அடுத்த வருடம் நடுப்பகுதியில் வன்னியின் கலைத்துறையின் வளர்ச்சிக்கு அரும்பணி யாற்று கின்ற கலைஞர்களை கெளரவிக்கின்ற உன்னதமான கௌரவிப்பு விழாவை நடாத்த திட்டமிட்டிருக்கும் கழக உறுப்பினர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
இளைஞர்கள் இவ்வாறான துறைக்கு முன்னுரிமை அளித்து கலைஞர்களை கௌரவிக்க எண்ணியமை எம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகின்றதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக