புதன், 3 செப்டம்பர், 2014

ஐ.நா விசாரணைகள் பற்றிய தகவல்கள் புலி ஆதரவு புலம்பெயர் மக்களுக்கு கசிவு....!!!!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகள் பற்றிய இரகசிய தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகள் தொடர்பிலான 30 விடயங்கள் இவ்வாறு புலி ஆதரவாளர்களுக்கு கிடைத்துள்ளது.

இந்த 30 விடயங்கள் இலங்கை அரசாங்கத்திற்குக் கூட கிடைக்கவில்லை.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடமையாற்றி வரும் புலி ஆதரவாளர்கள் இந்த இரகசியங்களை கசியவிட்டுள்ளனர்.

மன்னார் மடு தேவாலயம் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தினர் உள்ளிட்ட தகவல்கள் இந்த இரகசிய தகவல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சனல்4  ஊடகத்தின் நோபயர் ஸோன் காணொளி வெள்ளைக் கொடி சம்பவம்ää ஊடகவியலாளர் சிவராம் படுகொலை,  ஐ.நா காரியாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பிலான சாட்சியங்களை அளிக்குமாறு புலி ஆதரவாளர்கள் கோரி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக