திங்கள், 1 செப்டம்பர், 2014

வவுனியாவில் தமிழ்த்தூது வண.பிதா.தனிநாயகம் அடிகளாரின் நினைவுதினம்!!(படங்கள் இணைப்பு)

வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின்  நினைவுச் சிலைக்கு முன்னால் இன்று காலை 8.00 மணியளவில்  நினைவு கூறப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு.நித்தியானந்தன், வவுனியா நகரசபைச் செயலாளர் திரு.சத்தியசீலன்,வவுனியா நகரசபை  முன்னைநாள் உப தலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம், கோயில்குளம் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு.சிவஜானம், தமிழ் மணி அகளங்கன், வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க தலைவர் திரு.சேனாதிராசா,
வரியிறுப்பாளர் சங்கத்தலைவர் சந்திரகுமார், கவிஞர் மாணிக்கம் ஜெகன், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் தனிநாயகம் அடிகளாரின் வாழ்க்கை வரலாறுகள் அடங்கிய ஜாபகார்த்த புத்தகம் ஒன்றும்  வெளியிடப்பட்டு   தமிழ் மணி அகளங்கன் அவர்கள் நினைவுப்பேருரை நிகழ்த்தியமை  குறிப்பிடத்தக்கது.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக