
இலங்கையின் அரச சார்பற்ற அமைப்புக்கள் மீது அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உப்புல் ஜெயசூரிய குற்றம் சுமத்திய நாள் முதல் அவரின் வாகனத்தை மோட்டார் சைக்கிளில் சுமார் மூன்று பேர் தொடர்வதாக முறையிடப்பட்டிருந்தது.
எனினும் உரிய பொலிஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.
இதனையடுத்து கடந்த ஜ-லை 31 ஆம் திகதி சட்டத்தரணிகள் சங்க தலைவரின் வருகைக்காக அவரின் அலுவலகத்தில் காத்திருந்த அடையாளம் தெரியா
த ஒருவர் சற்று நேரத்தில் அங்கிருந்து தப்பிசென்று விஹாரமகாதேவி பூங்காவின் அருகில் இருந்து இலக்கதகடற்ற வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளார்.
இதேவேளை அதேதினத்தில் மாலை 5 மணியளவில் மூன்று பேர் சட்டத்தரணிகள் சங்க தலைவரின் அலுவலகம் முன்னால் நின்றிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தபோது அவர்கள் பாதுகாப்பு கண்காணிப்புக்காக நிற்பதாக ஜெயசூரியவுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இந்தநிலையிலேயே சாதாரண உடைகளில் நின்ற குறித்த மூன்று பேரின் புகைப்படங்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக