யாழ்ப்பாணத்தில் காணிகளை அபகரிப்பதற்காக இலங்கை இராணுவத்தினர் கூறி வந்த பொய் காரணங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பொதுத் தேவைகளுக்காக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினர் பொது மக்களின் காணிகளை சுவீகரித்தனர்.
எனினும் இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளில் பெரும்பாலானவை
அவர்கள் கூறிய காரணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப இயக்கத்தின் மனித உரிமைகள் வேலைத்திட்டம், பல்வேறு செய்மதிப் புகைப்படங்களை ஆராய்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சமாதானத்துக்கும், நீதிக்குமான இயக்கம் விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி கைப்பற்றப்பட்ட காணிகளில் 30 சதவீதமானவை பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய பெரும்பாலான பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமாக வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதும், அதற்கான காரணங்கள் எவையும் தெரியவில்லை.
மேலும் விடுமுறை விடுதிகள் போன்ற ஆடம்பர தேவைகளுக்காகவும் இந்த காணிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்மதிப் படங்கள் உறுதி செய்துள்ளதாக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக