திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஜனாதிபதியின் சொந்த ஊரில் 2015 சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்தத் தீர்மானம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சொந்த ஊரில் 2015ம் வருட தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி அம்பாந்தோட்டை, வீரகெட்டிய என்னும் இடத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.

வீரகெட்டியவில் சுதந்திர தின நிகழ்வுகளை
நடாத்த அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதற்காக பிரதமர் டி.எம். ஜயரட்ன தலைமையிலான 12 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் சமால் ராஜபக்ச, அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஜோன் செனவிரட்ன, கெஹலிய ரம்புக்வெல்ல,  டி.பி. ஏக்கநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

30000 பேரின் பங்களிப்புடன் சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக