ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

சுனாமியை விடவும் பாரிய அழிவுகள் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய அபாயம்?



2004ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியை விடவும் பாரியளவில் அழிவுகள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இறுதியில் இவ்வாறு பாரிய இயற்கைப் பேரழிவு ஒன்று
இடம்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக உலக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எல்னினோ என்ற கடுமையான புயற்காற்றின் சீற்றம் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளை பாதிக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது.

புயல் காற்றினால் ஆசிய கண்டத்தின் இலங்கை, இந்தோனேசியா, இந்தியா போன்ற நாடுகளின் வெப்பநிலை உயர்ந்து பாரியளவில் வரட்சி ஏற்படக் கூடும்.

தென் அமெரிக்க நாடுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும்.

காலநிலை சீர்கேட்டின் பாதிப்புக்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையில் நீடிக்கும்.

இயற்கை அனர்த்தம் காரணமாக இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஆளும் கட்சியின் கட்சித் தலைவர் கூட்டத்திலும் பேசப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்த நிலைமை தேசிய ரீதியான தேர்தல்களையும் மோசமாக பாதிக்கும் என கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக