திங்கள், 25 ஆகஸ்ட், 2014

வவுனியாவில் வெகு சிறப்பாக நடைபெற்ற தேசியவீரன் பண்டாரவன்னியன் ஞாபகார்த்த நிகழ்வு.!!(படங்கள் இணைப்பு)

(ஓவியன்) வவுனியாவில் இன்றையதினம்(25/08)  தேசியவீரன் பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த விழா வவுனியா அரசாங்க அதிபர் பணிமனைக்கு முன்பாக அமைந்துள்ள தேசியவீரனின் உருவச்சிலைக்கு காலை 8.30 மணிக்கு மலர் மாலைகள் அணிவித்து, பின்னர் நகர ஊர்வலமாக நகரசபை கலாசார மண்டபத்தை அடைந்து அங்கு நிகழ்வுகள் நடைபெற்றன. 

தேசியவீரன் பண்டாரவன்னியனின் நினைவுப்பேருரையினை
மூத்த ஊடகவியலாளர் திரு அருணாசெல்லத்துரை அவர்கள் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடாத்திய கவிமன்றம் திரு த.ஐங்கரன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து வவுனியா கலைத்தொடர்பு மையம், கோவில்குளம் இளைஞர் கழக அனுசரணையில் நடாத்திய தேசியவீரன் பண்டாரவன்னியன் நாடகம் நடைபெற்றது. தொடர்ந்துநகரசபையின் செயலாளர் திரு க.சத்தியசீலன் நன்றியுரை வழங்கினார். 

தலைமையுரையில் தலைவர் இரத்தினசிங்கம் சிவசோதி அவர்கள், வன்னியின் வரலாற்று நாயகன் தேசியவீரன் பண்டாரவன்னியனின் சிலையினை வவுனியாவில் நிறுவுவதற்கு முக்கிய காரணமானவர்கள் இருவர் அவர்களில் முன்னாள் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் திரு மு.சிற்றம்பலம்,வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரம், முன்னாள் நகரசபை தலைவர் திரு ஐ.கேதீஸ்வரன் ஆகியோரின் அர்ப்பணிப்பில் உருவாக்கப்பட்டது. .

மேற்படி நிகழ்வானது வரலாறு காணாத மாபெரும் நிகழ்வாக நடைபெற்றது. ஜூலை 16 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையான 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில், முத்தமிழ் விழாவாக நடைபெற்றது. இதன் போது தென்னிந்திய, யாழ் கலையுலகத்தினைச் சேர்ந்த பலரின் வருகையால் நிகழ்வு சிறப்புற்றது. 

அதன்  பின்னரான காலப்பகுதியில், நாட்டின் அசாதாரண சூழ் நிலையில் கவனிப்பாரற்று இருந்த தேசிய வீரனின் உருவச்சிலை 1990 களில் புனரமைத்து, கலை விழாக்கள் மேற்கொள்ளும் நோக்கில்  பாராளுமன்ற உறுப்பினர் திரு சண்முகநாதன்(வசந்தன்) அவர்களினால் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக் குழுவில் வையாபுரிநாதன், கிருபா மாஸ்டர், நடேசபிள்ளை, செல்லக்கண்டு, குருசாமி ஆகியோர் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது. இக் குழுவின் மூலம் சிலை புனரமைக்கப்பட்டு, நினைவு நிகழ்வுகளும் நடைபெற்றது. 

பின்னர் 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சண்முகநாதன் வசந்தன், வை. பாலச்சந்திரன் ஆகியோர் தமது அபிவிருத்தி நிதியிலிருந்து 7 இலட்சம் ரூபாவினை ஒதுக்கி உருவச்சிலை மற்றும் சுற்று பகுதி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் அப்போதைய வவுனியா நகர சபையின் நகர பிதா திரு. லிங்கநாதன்(விசு)  , உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரின் இடைவிடாத முயற்சியால் நகரசபையால் தேசியவீரன் பண்டாரவன்னியனின் விழாக்குழு அமைக்கப்பட்டு அதனூடாக விழாக்கள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.  என தனது தலைமையுரையில் தெரிவித்தார்.  

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு எம்.கே. பந்துலகரிச்சந்திர அவர்களும், விசேட விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான திரு சிவசக்தி ஆனந்தன் , திரு வினோ நோதராதலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான திரு இந்திரராசா, திரு தியாகராசா ஆகியோரும் பிரதேச சபைத்தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், அதிபர்கள், கிராம சேவையாளர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். 

சிறப்பு விருந்தினர்களாக, வவுனியா பிரதேச செயலாளர் திரு கா.உதயராசா, முன்னாள் வவுனியா மாவட்ட சபைத் தலைவர் திரு மு.சிற்றம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர். 






























































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக