ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், எரிபொருள் ஏற்றுமதியில் ஈடுபடும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் அமைப்பான ஒபெக்கின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் ஒபெக் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அரசாங்கத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
ஒபெக் நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் தனியான
உறவுகளை பேணி வருகின்றது.
இவ்வாறான ஓர் நிலையில் ஒபெக்கின் பிரதிநிதிகளுடன், முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பு நடத்தியமைக்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
குறித்த அமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியமை குறித்து அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னரும் மத்திய கிழக்கு நாடுகளின் அமைப்பு ஒன்றுடன் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.
ஒபெக் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸுடன் நெருங்கிச் செயற்படும் வர்த்தகர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக