செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

30 மாதங்களில் மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள்!!

எதிர்வரும் 30 மாதங்களில் நாட்டில் மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ள அதிகாரிகள் பற்றிய தகவல்களை தேர்தல் ஆணையாளருக்கு வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அரச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர்,
மாகாணசபை பிரதான செயலாளர்கள் மற்றும் அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள மாகாணசபை, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடாத்துவதற்காக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தகவல்களை கோரியுள்ளார்.

தகவல்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணையாளர், ஜனாதிபதியின் செயலாளரிடம் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஜனாதிபதியின் செயலாளர் உரிய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு தகவல்களை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக