ஞாயிறு, 6 ஜூலை, 2014

மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் சாட்சியங்களை திரட்டும் பணியில்.....!!!!

மேற்குலக நாடுகளின் தூதரகங்கள்,  உயர்ஸ்தானிகராலயங்கள் வடக்கில் சாட்சியங்களை திரட்டும் பணிகளில் இரகசியமாக ஈடுபட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு போர்க் குற்றச் செயல்கள தொடர்பிலான சாட்சியங்களை சமர்ப்பிக்கும் நோக்கில் இவ்வாறு சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

சாட்சியமொன்றுக்கு 50,000 ரூபா வழங்கப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராஜதந்திர வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி இவ்வாறு சாட்சியங்கள் திரட்ப்பட்டு வருகின்றன.

விசாரணைகளுக்கு அரசாங்கம் அனுமதியளிக்க மறுத்தால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வேறு வழிகளில் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்துள்ளன.

அதன் ஓர் கட்டமாகவே சாட்சியங்களை திரட்டும் இரகசிய திட்டம் அமைந்துள்ளது.


அண்மையில் சுவிற்சர்லாந்து தூதரக அதிகாரிகள் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்த அதிகாரிகள் குழுவில் சுவிஸ் மனித உரிமை தொடர்பிலான அதிகாரிகள் இருவரும் இணைந்து கொண்டிருந்தனர்.

வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளன.

காணாமல் போனவர்களின் 25 உறவினர்களிடம் எழுத்து மூலம் தகவல் திரட்டப்பட்டுள்ளது.

இராஜதந்திர வழிகள் மட்டுமன்றி புலி ஆதரவு அமைப்புக்கள்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் தமிழ் சமூகம் போன்றவற்றிடமும் சாட்சியங்கள் திரட்டப்படவுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியான சாட்சியங்களை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளன.
இதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக