வெள்ளி, 13 ஜூன், 2014

காணாவத்தை வேள்வி நாளை திட்டமிட்டபடி நடைபெறுமாம்!!

கீரிமலை காணாவத்தை வைரவர் ஆலயத்தில் வேள்வி நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அதிகார சபையிடம் பெறப்பட்ட அனுமதியின் அடிப்படையில் இதனை நடத்துவதற்கான எற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளார்கள்.

ஆலயத்தில் மிருகபலியை நிறுத்தக் கோரி மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை உள்ளூராட்சி அதிகார சபையின் அனுமதி உரிய
முறையில் பெறப்பட்டால் மட்டும் வேள்வியை மேற்கொள்ள முடியும் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

தற்போது உரிய அனுமதி பெறப்பட்ட நிலையில் வேள்வி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய சட்டப் பிரிவுகளின் பிரகாரம் விசேட மதச் சடங்குகளுக்கு ஆட்சேபனையை உள்ளூராட்சி அதிகார சபை தெரிவிக்காத இடத்தில் இதனை மேற்கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில் இந்த வேள்வி நடை பெறுகின்றது எனக் கூறப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக