புதன், 11 ஜூன், 2014

வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தினால் தகரங்கள் அன்பளிப்பு!! (படங்கள் இணைப்பு)

வவுனியா   பாலமோட்டைப்பகுதியில் அரச வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாமல் இருந்த குடும்பங்களுக்கு கோவில்குள இளைஞர் கழக அனுசரணையில் இன்றையதினம் தகரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகரங்களை அவுஸ்ரேலியாவில் வாழும் எமது புலம்பெயர் சமூக ஆர்வலர்களான மேகலா விக்னேஸ்வரன் மற்றும் முகுந்தனின் பங்களிப்பில் இவ் உதவிகள் இன்று(11/05) வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் தகரங்களை வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் கோவில்குளம் இளைஞர் கழக ஆலோசகர் திரு முத்தையா கண்ணதாசன் அவர்களுடன் கோவில்குளம் இளைஞர் கழக இணைப்பாளர் காண்டீபன், தொழில்நுட்ப இயக்குனர் சதீஸ், கழக பொருளாளர் நிகேதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள், எமது அவுஸ்ரேலியாவில் வாழும் உறவுகளான மேகலா விக்னேஸ்வரன் மற்றும் முகுந்தன் அவர்களின் உதவியால் இன்றையதினம் நான்கு குடும்பங்களுக்கு தகரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எம்மால் இவ்வாறன உதவிகளையும் வழங்க கூடியதாக அமைந்தது எமக்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. எமது உதவிகளின் வடிவங்கள் மாறிய வண்ணம் உள்ளதனையிட்டு எமது கோவில்குளம் இளைஞர் கழகம் பெருமிதம் கொள்கிறது. மேகலா விக்னேஸ்வரன் மற்றும் முகுந்தன் ஆகியோருக்கு எமது கழகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

ஊடக பிரிவு,
கோவில்குளம் இளைஞர் கழகம்,
வவுனியா.



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக