நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் ஏற்பட வேண்டி சர்வ மதத் தலைவர்கள் ஒன்று கூடி வவுனியாவில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இன்று காலை 9.30 மணிக்கு வவுனியா பொலிஸ் நிலையத்தில் இந்த அமைதிப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த மதங்களின் தலைவர்கள் இந்தப் பிரார்த்தனையில் கலந்துகொண்டனர். அளுத்கம,பேருவளைப்பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்
இதன்போது அமைதியும் நிம்மதியும் கிடைக்க வேண்டப்பட்டது.
இந்த நிகழ்வில், வவுனியா தலதா விகாரை ஆனந்த தேரர், நகர பள்ளிவாசல் மதகுரு அப்துல் சித்திக், இறம்பைக்குளம் தேவாலய மதகுரு சத்தியலிங்கம், வவுனியா நாகபூசனி தேவஸ்தான குரு வாசுதேவ சர்மா, வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித்வெதமுன, வவுனியா பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சன்அபேயவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக