இலங்கையில் போர்க் குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச குழு எதிர்வரும் செப்டம்பரில் தமது ஆரம்பக்கட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.
இந்தக்குழுவின் மூன்று முக்கிஸ்தர்கள் நேற்று பெயரிடப்பட்டனர். எதிர்வரும் தினங்களில் ஏனையவர்களும் பெயரிடப்படவுள்ளனர்.
இதனையடுத்து தமது விசாரணைகளை ஆரம்பிக்கும் குறித்த குழு எதிர்வரும் செப்டம்பரில் தமது ஆரம்பக்கட்ட அறி;க்கையை சமர்ப்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும் இலங்கைக்குள் இந்தக் குழுவை அனுமதிப்பதற்கான வீசா வழங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இன்னும் உத்தியோகபூர்வ மறுப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக