இன்று கொழும்பில் வெளியாகியுள்ள சிங்கள மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில் இந்த விடயம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியில் அமைச்சு பதவி கிடைக்காமை காரணமாகவே அவர் கட்சி
மாறப்போவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திகாம்பரம் பின்னர் ஆளும் கட்சியில் இணைந்துக் கொண்டார்.
இந்தநிலையில் இரண்டு கட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மற்றும் ஒரு பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் இந்தியாவில் இடம்பெறவுள்ளதாகவும் இன்றைய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் பதில் அளித்துள்ள திகாம்பரம், தாம் எதிர்கட்சிக்கு செல்லப்போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் தமக்கிருக்கும் செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கையாகவே இந்த செய்தியை தாம் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக