சனி, 7 ஜூன், 2014

சு.கவை காப்பாற்றும் இயக்கம்: சந்திரிகா தொடங்குகின்றாராம்!!

அரசியலில் ஒதுங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 'ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாத்தல்' என்ற பெயரில் இயக்கம் ஒன்றை முன்னெடுக்கவிருக்கிறார் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தனது தந்தையாரால் உருவாக்கப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சந்திரிகா இப்போது எந்தப் பதிவியையும் வகிக்கவே இல்லை. தற்போது வெளிநாட்டுப் பயணத்தில்
இருக்கும் முன்னாள் ஜனாதிபதி இந்த மாத இறுதியில் நாடு திரும்புவிருக்கிறார்.

நாடு திரும்பியதும் கட்சியைக் காப்பாற்றும் இயக்கத்தை அவர் ஆரம்பிப்பார் எனக் கூறப்பட்டது. தற்போதைய ஶ்ரீ.ல.சு. கட்சியின் தலைமையினால் ஓரங்கட்டப்பட்ட மூத்த பிரமுகர்கள் பலரின் ஆதரவு சந்திரிகா அம்மையாருக்குக் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் பொது வேட்பாளராக நிற்கும் தீர்மானம் எதனையும் அவர் எடுக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி தெரிவித்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக