திங்கள், 16 ஜூன், 2014

இந்த அரசில் அமைச்சராக இருப்பதற்கு நான் வெட்கப்படுகிறேன் - ஹக்கீம்!!


எனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தர்ஹா நகர் பகுதிக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஹக்கீம் அங்கு குழுமியிருக்கும் மக்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். எனது மக்களை காப்பாற்ற முடியாத
நிலையில், இந்த அரசாங்கத்தில் தான் தொடர்ந்து இருக்கவேண்டுமா? என்பது தொடர்பில் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக