அளுத்கமவில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது எனவும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறும், அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தண்டனையை வழங்குவதற்காக விசாரணை ஒன்று
இடம்பெறும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். ஜீ-77 மாநாட்டுக்காக பொலீவியா சென்றுள்ள ஜனாதிபதி அங்கிருந்து இந்தத் தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக