ஞாயிறு, 15 ஜூன், 2014

கைதடியில் கலைத்துக் கலைத்து வாள்வெட்டு! இருவர் படுகாயம்!!


கைதடிச் சந்தியில் இன்றிரவு 8 மணியளவில் கூடிக் கதைத்துக் கொண்டிருந்த மூவரை திடீரென மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்திறங்கிய குழு ஒன்று கலைத்துக் கலைத்து வெட்டியது. மூவரில் ஒருவர் ஓடித் தப்பினார். மற்றைய இருவுர் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகினர். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட அவர்கள் அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டனர்.
கோகுலநாதன் கோமளன் (வயது 34), சுந்தரலிங்கம் சுகிர்தராஜன் (வயது 34) ஆகிய இருவருமே வாள்வெட்டுக்கு இலக்கியவர்களாவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக