ஜனாதிபதி இல்லாத போது, முழுமையான பொறுப்பையும் கையேற்று செயற்படக் கூடிய தகுதி வாய்ந்த பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று இலங்கை லிபரல் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அந்த கட்சியின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதக் குழுக்கள் நடத்தப்பட்ட தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.
அது குறித்து சரியான தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய நிலைமை கூட
நாட்டு மக்களுக்கு காணப்படவில்லை.
இந்த துரதிஸ்டவசமான சம்பவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டில் இல்லாத நிலையிலேயே ஏற்பட்டிருந்தது.
தேடிப் பார்க்கும் போது, அரசாங்க அதிகாரிகள் உரிய வகையில் தங்களின் கடமைகளை மேற்கொள்ளாமையும், அந்த அதிகாரிகளுக்கான உத்தரவுகள் மேலிடத்தில் இருந்து பிறப்பிக்கப்படாமையுமே காரணமாக இருக்கிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி நாட்டில் இல்லாத போது, அவரின் கடமையை சரியாக செய்வதற்கு, நாட்டின் அசாதாரண நிலைமைகளை கட்டுப்படுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்கவும் தகுதி வாய்ந்த பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று லிபரல் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக