இலங்கையை சிங்கள தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இன்று நெல்லைக்கு விஜயம் செய்த அவர், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
இலங்கை இராணுவத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ராஜபக்ச நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுதலை செய்ததாக கூறுகிறார்.
மீனவர்களை கைது செய்யும்போது அவருக்கு எந்த எண்ணம் இருந்தது. விமானங்களை கடத்தும் தலீபான் தீவிரவாதிகள் மிரட்டுவது போல உள்நாட்டு
மக்களை சிறைபிடித்து இலங்கை, இந்தியாவை மிரட்டுகிறது.
எனவே இலங்கையை சிங்கள தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும். இலங்கை தமிழர்களை தாக்கி வந்த சிங்களர்கள் தற்போது இஸ்லாமியர்களையும் தாக்க தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் தமிழ் இனத்தையே ஒழிக்க நினைக்கிறார்கள். இலங்கை ஜனநாயக நாடு என்று கூறுபவர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இடது சாரி கட்சியினர் சிந்திக்க வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு தமிழர்கள் நலனில் சிறப்பாக செயல்படும் என எண்ணுகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக