சனி, 21 ஜூன், 2014

பாணந்துறை நோலிமிட் ஆடை நிறுவனம் தீக்கிரை! பொதுபசேனா வெறிச்செயல்....!!!

இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையம் நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை காட்சியறைகளில் நோலிமிட் நிறுவனம் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றது. இதன் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்ற போதிலும், சுமார் இரண்டாயிரம் சிங்களவர்கள் மற்நும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களும் இந்த நிறுவனத்தின் மூலம் வருமானத்தைப் பெற்று வந்துள்ளனர். இந்நிறுவனம் சுமார் ஐயாயிரம் ஊழியர்களைக் கொண்டதும், நாட்டின் முக்கிய நகரங்களில் பல கிளைகளை் கொண்டதுமாகும்.

இந்நிலையில் பாணந்துறை நகரின் அரச மருத்துவமனை அருகில் அமைந்திருந்த நோலிமிட் நிறுவனத்தின் காட்சியறை சற்றுமுன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் உள்ளே தங்கியிருந்த நிலையில், பொதுபல சேனா தீவிரவாதிகள் வெளியிலிருந்து நோலிமிட் காட்சியறைக்குத் தீவைத்துள்ளார்கள்.


தீ வேகமாகப் பரவிய நிலையில், உள்ளே தங்கியிருந்த ஊழியர்கள் ஏழு பேர் பெரும் சிரமத்தின் மத்தியில் உயிர் தப்பியுள்ளனர். ஏனைய ஊழியர்களின் நிலை குறித்து தகவல்கள் தெரியவில்லை.

இதற்கிடையே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பதற்காக கொழும்பு உள்ளிட்ட இடங்களிலிருந்து தீயணைப்பு வண்டிகள் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக