கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள திருகோணமலையில் இடம்பெற்ற இரண்டு குற்றச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.
2006 ஆம் ஆண்டு மூதூரில் கொல்லப்பட்ட எக்சன் பெய்ம் நிறுவனத்தின் 17 பணியாளர்கள் மற்றும் திருகோணமலை கடற்கரையில் கொல்லப்பட்ட 5 மாணவர்கள் தொடர்பான விசாரணைகளே விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி இரண்டு சம்பவங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்கள பணிப்பின் பேரில் குற்றப்புலனாய்வுத்துறையினர் சாட்சியங்களை பதிவுசெய்துள்ளனர்.
மூதூர் சம்பவம் தொடர்பில் எக்சன் பெய்ம் பணியாளர்கள் மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர் ஒருவரின் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் கொலை தொடர்பில் பொலிஸ் மற்றும் கடற்படையினர், இராணுவத்தினரின் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மாணவர் ஒருவரின் உறவினர்களது சாட்சியம் பதியப்பட்டுள்ளது.
எனினும் சாட்சி பட்டியலில் உள்ள 7 பேர் வெளிநாடுகளில் வசிப்பதால் அவர்களின் சாட்சியங்களை பெறமுடியாதுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக