தன் வசம் நாக பாம்பு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த பாம்பு பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன (டிலானி) என்பவர் பிரசவத்திற்கான அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில் இரவு நேர நடனப் பெண்ணாகப் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண் தங்கியிருந்த அநுராதபுரம் வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பொலிஸ் அனுமதி இன்றி எவரும் இவர் தங்கியிருந்த அறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இவர் சிறிது காலம் சுல்த்தான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக