வெள்ளி, 6 ஜூன், 2014

கல்முனைப் பிரதேச செயலராக பெரும்பான்மை இனத்தவர் நியமனம்!!


கல்முனைப் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலராக பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மகா ஓயா பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய மொஹான் விக்ரம ஆராய்ச்சி என்பவரே கல்முனை பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை நேற்றுப் பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை பிரதேச செயலகத்தின் வரலாற்றில், சிங்களவர் ஒருவர் பிரதேச செயலாளராக
நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

கடந்த பல வருடங்களாக கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நௌபல், கடந்த பெப்ரவரி மாதம் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜ.எம்.ஹனீபா, இங்கு பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக