இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. விசாரணைக் குழுவின் இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாஸ் அம்மையாரை நியமித்துள்ளதாக இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் ஆணையாளர் நேற்றிரவு அறிவித்துள்ளார். குழுவின் இணைப்பாளரான பெய்டாஸ் அம்மையாரை ஜெனீவாவில் இருக்கும் இலங்கையின் வதிவிடப்
பிரதிநிதியான ரவிநாத் ஆரியசிங்கவுக்கு ஐ.நா. விரைவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விசாரணைக் குழுவைத் தெரிவு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் இந்த் பணி எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடருக்கு முன்னதாக இறுதி செய்யப்படும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஆதாரம் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணைகள் பத்து மாதங்களில் நிறைவடையும் என்றும் வரும் ஜூலைக்கும், நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்த விசாரணைக் குழு இலங்கைக்குப் பயணங்களை மேற்கொள்ளும் என்றும் தெரிய வந்துள்ளது. இது இவ்வாறிருக்க இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என அரசின் முக்கிய பிரமுகர்கள் சிலர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக