வெள்ளி, 20 ஜூன், 2014

கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடு பொலிஸ் மா அதிபர்...!!!

கொழும்பு நகர் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் இன்று  வெள்ளிக்கிழமை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுளளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
அந்தந்த பொலிஸ் நிலையங்களின் ஊடாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இன, மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இவ்வாறான வதந்திகளைக் கேட்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது.

எந்தவொரு முரண்பாட்டு நிலைமையும் ஏற்படாத வகையில் முஸ்லிம் பௌத்த தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் பள்ளிவாசல்களில் முஸ்லிம் மத பிரார்த்தனைகள் இடம்பெறுவது வழக்கம்  என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சமாதானத்தை நிலைநாட்ட பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக