அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது அப்போது அங்கு பேருவளை மற்றும் அளுத்கம சம்பவம் குறித்து அலசப்பட்டது.
இந்த வேளையில் குறிக்கிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஜனாதிபதியை நோக்கி 1983 ஜூலையில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு பிறகு உங்களின் ஆட்சியில் தான் மீண்டும் ஒரு இனக்ககலவரமும் பேரழிவும் ஏற்பட்டுள்ளன
அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்திற்கான முழுப்பொறுப்பையும் உங்கள் தலைமையிலான இந்த அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
இதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் காரணமானவர் ஞானசார தேரர். ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இனியும் நீங்கள் கைது செய்யாவிட்டால் இதைவிட மோசமான அழிவை இந்த நாடு சந்திக்கும் என்றார்.
அப்போது ஜனாதிபதி அமைச்சர் ரிசாத் பதியுதீனைப் பார்த்து, நீங்கள் முஸ்லிம்களுக்காக பேசுவதைப்போல், இங்குள்ள சிங்கள அமைச்சர்கள் சிங்கள மக்களுக்கு பேசத் தொடங்கினால் என்ன நடக்கும் என்று தெரியுமா எனக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் நீங்கள் அப்படி கூறக் முடியாது. நீங்கள் ஜனாதிபதி சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ் ,முஸ்லிம் மக்கள் என அனைவருக்கும் பொதுவானவர். நீங்கள் அனைவரையும் சமனாகவே பார்க்க வேண்டும். வாக்கை மையமாகக் கொண்டு நீங்கள் செயற்பட கூடாது என்றார்.
இந்த பதில் ஜனாதிபதிக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது. கதிரையை விட்டு ஆவேசத்துடன் எழுந்த ஜனாதிபதி உன்னுடைய பேச்சை உடன் நிறுத்து. வாயைப் பொத்து என்று உரத்து சத்தம் இட்டு, நீ ஒரு இனவாதி, நீ ஒரு மதவாதி, உன்னுடைய செயற்பாடுகளை அவாதானித்துக் கொண்டுதான் வருகிறேன் என சீறிப்பாய்ந்தார்.
இதன் பிற்பாடு அமளிதுமளி ஏற்பட்டது.
இந்த வேளை அமைச்சர் ரிசாத்தை நோக்கி கை நீட்டிய சம்பிக்க ரணவக்க பொதுபல சேனாவை மட்டும் தடைசெய்ய முடியாது என்றார்.
இதனை கடுமையாக எதிர்த்த அமைச்சர் ரிசாத் பதியுதீன், பொதுபலசேனாவை மட்டும் முடியாது என்றால் தடைசெய்வதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் ஏதும் இருக்கின்றதா எனக் கேட்டார்.
எநதவொரு முஸ்லிம் அமைப்பும் இனவாதமாக செயற்படவில்லை எனக் கூறினார். இதன் பிற்பாடு அமைச்சரவை கலைந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக