சனி, 21 ஜூன், 2014

பல்கலையில் ஆங்கில அறிவை மேம்படுத்த நடவடிக்கை....!!!

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், 17 பல்கலைக்கழகங்களிலும் மொழி ஆய்வு கூடங்களை நிறுவ இருப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மொழி விடைக்காக சஜித் பிரேமதாச எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்த மொழி ஆய்வு விடயங்களுக்கு 21 ஆம் நூற்றாண்டின் உயர் கல்விக்கான செயற்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப் பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் பெரும்பாலான பாடநெறிகள் ஆங்கில மொழியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமன்றி அவர்களின் ஆங்கில மொழியறிவை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.



தொழில் துறையின் கேள்விக்கு ஆங்கில மொழியறிவின் அவசியத்தை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உணர்த்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக