வியாழன், 12 ஜூன், 2014

ஜனாதிபதி இன்று பொலிவியா பயணம்...!!!

ஜீ-77 நாடுகள் அமைப்பின் 50 வது வருட நிறைவு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (12 ஆம் திகதி) பொலிவியா நாட்டுக்கு விஜயம் செய்கின்றார் என்று ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்கா நேற்றுத் தெரிவித்தார்.

ஜீ-77 நாடுகள் அமைப்பின் 50வது வருட நிறைவு மாநாடு தென்னமெரிக்க நாடான பொலிவியாவின் சண்டாகுருஸ் நகரில் எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

“சிறப்பாக வாழ்வதற்கான புதிய உலக ஒழுங்கு (For a new world order for Living well.) என்ற தொனிப் பொருளில் நடைபெறுகின்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 15 ஆம் திகதி விசேட உரையாற்ற விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



இதேவேளை, இம் மாநாட்டில் பங்குபற்றும் பல உலக நாடுகளின் தலைவர்களுடனும் ஜனாதிபதி அவர்கள் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக