ஞாயிறு, 15 ஜூன், 2014

இந்தியாவின் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மீளாய்வு...!!!!

இந்திய அரசாங்கம் சகல நாடுகளுடனும் மேற்கொண்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மீளாய்வு செய்யவுள்ளது.  இது இலங்கை அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசாங்கம் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனை மீளாய்வு செய்வதற்கு தாம் உத்தரவிட்டிருப்பதாக இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கடந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் போது புதுப்பிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் இலங்கை அரசாங்கமே அதிக நன்மையை பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த உடன்படிக்கை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில் அது இலங்கைக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.


இந்தியாவின் பொருளாதாரத்துக்கு உரிய பங்களிப்பை வழங்காத அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்யவிருப்பதாகவும் வர்த்தக அமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக