பொதுபல சேனா இயக்கத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட உள்ள நிகழ்வு தடை செய்யப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கம் இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் சமய வழிபாட்டு நிகழ்வு ஒன்றை நடத்தவுள்ளது என்று தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
எவ்வாறெனினும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவோ அல்லது இன வன்முறைகளைத் தூண்டவோ இந்த சமய நிகழ்வு பயன்படுத்திக்கொள்ளப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா இயக்கம் அதிஷ்டான பூஜையொன்றை நடத்த உள்ளதாகவும் அதனை நடத்த தலதா மாளிகை நிர்வாகத்தினர் இதுவரை அனுமதி
வழங்கவில்லை எனவும் இதனால் இந்த நிகழ்வு நடைபெறுவது சந்தேகமே எனவும் அவர் தெரிவித்தார். மஹிங்கனை, கண்டி மற்றும் கொழும்பைச் சேர்ந்த 300 முதல் 400 பௌத்த பிக்குகளின் பங்களிப்புடன் இந்த சமய நிகழ்வை நடத்த உத்தேசித்துள்ளதாக பொதுபல சேனா இயக்கம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக