வெள்ளி, 6 ஜூன், 2014

அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திய படகோட்டிகளுக்கு சிறை....!!

இந்தோனேசியாவிலிருந்து அவுஸ் திரேலியாவுக்கு ஆட்களை கொண்டு செல்லும் வழியில் நூற்றுக்கும் மேற் பட்ட குடியேறிகள் கடலில் மூழ்கி உயிரிழக்கக் காரணமான மனிதக் கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் கொண்டிருந்த தொடர்புக்காக 2 இந்தோனேசியர்களுக்கு நீண்ட சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

சிறிய மரப் படகு ஒன்றில் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கொண்டு செல்லும் வழியில் இந்து சமுத்திரத்தில் இந்தப் படகு கவிழ்ந்தது. அந்த படகோட்டி களுக்கே அவுஸ்திரேலியாவின் பேர்த் நகர நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 9 ஆண்டுகளும் மற்றையவருக்கு 6 ஆண்டுகளும் சிறைத்தண்டனை அளிக் கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்தப் படகு விபத்தின்போது நூற்றுக்கும் மேற் பட்டவர்களை அவுஸ்திரேலிய அதி காரிகள் காப்பாற்றியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக