வெள்ளி, 6 ஜூன், 2014

வடக்கின் நிர்வாக மொழி தமிழே உரிமையை ஒருபோதும் விடமாட்டோம்! உறுமயவின் குற்றச்சாட்டுக்கு சிவஞானம் பதில்!!

"வடக்கு மாகாண சபையின் நிர்வாக மொழி தமிழ் என்பது அரசமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே எமது நிர்வாக மொழியாக தமிழைப் பயன்படுத்துவது எங்கள் உரிமையாகும். எனவே நாம் ஒருபோதும் எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது." - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்.

தமிழ் மொழியில் தமக்கு கடிதம் அனுப்பியதன் மூலம் வடக்கு மாகாண சபை
மொழிக்கொள்கையை மீறிவிட்டது என்ற ஜாதிக ஹெல உறுமயவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இப்படிக் கூறினார். அத்துடன் வடக்கு மாகாண சபையை சிங்கள மொழி பேசுபவர்கள்அணுகும் போது அவர்களுக்கு அந்த மொழியிலேயே பதில் அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவிர ஜாதிக ஹெல உறுமய போன்ற கடும்போக்கு அணுகுமுறையுடைய கட்சிகளுக்கு தமிழில் அனுப்பபட்ட கடிதத்துக்கு மொழி பெயர்ப்பு தேவைப்படின் எம்மை அணுக முடியும். - என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக