உயர்தரப் பரீட்சை க்கான வினாத்தாள் தயாரிக்கும் நடவடிக் கையில் தான் தலையீடு செய்ததாக நிரூபித்தால் முழு பாராளுமன்றத்திலும் பகிரங்கமாக மன்னிப்புக்கோரத் தயாராகவிருப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பரீட்சை நடவடிக்கைகள் அரசியல் மயமாவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையெனக் குறிப்பிட்ட அவர், தனிப்பட்ட தேவைகளுக்காக அப்பாவி மாணவர்களைப் பலியிட வேண்டாம் எனவும் சபையில் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று கல்வி அமைச்சுத் தொடர்பான விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர், உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள் தயாரிக்கும் குழு தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியிருந்தன.
பரீட்சைகளை நியாயமாக மாணவர் களுக்கு அநீதியின்றி நடத்த ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக பரீட்சை ஆணையாளருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் அவர் வினாத்தாள் திருத்தும் குழுவிலிருந்து பொருத்தமற் றவர்களை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து எமக்கு கேள்வியெழுப்ப முடியாது. யார் கல்வி அமைச்சராக இருந்தாலும் வினாத்தாள் தயாரிக்கும் பணிகளில் எதுவித தலையீடும் செய்வதில்லை. ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க கல்வியமைச்சராக இருந்தபோதும் இதே நிலைப்பாடே காணப்பட்டது.
பரீட்சை ஆணையாளருக்கு சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரமே வினாத்தாள் தயாரிக்கும் குழுவிலிருந்த இருவரை நீக்கியுள்ளார். இந்தக் குழுவிலிருந்த ஜகத் பண்டாரநாயக்க என்பவர் 10 வருடங்களுக்கு மேலாக சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமை யாற்றியவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக