செவ்வாய், 3 ஜூன், 2014

சீரற்ற காலநிலையால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு!!


தெற்கின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மற்றும் அதை அண்மித்த தெற்கு மாவட்டங்களில் இதன் பாதிப்புகள் கூடுதலாக உள்ளன என்று தேசிய பேரிடர் நிலையம் கூறுகிறது. தலைநகர் கொழும்பில் பல வீதிகள் மற்றும் அருகாமையிலுள்ள சிறு
நகரங்களின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை மாவட்டமே திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் 10 செ.மீ இற்கும் கூடுதலான மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது. தென்பகுதிக் கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக