வியாழன், 5 ஜூன், 2014

மேல் மாகாண சகல பாடசாலைகளிலும் வாரத்தில் இரு தினங்கள் டெங்கு ஒழிப்பு...!!!

மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் வாரத்தில் இரண்டு நாட்கள் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறு மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

பாடசாலைகளை டெங்கு ஒழிப்பு வலயங்களாக மாற்றி டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுக்குமாறும் அவர் மாகாண கல்வியமைச்சின் அதிகாரிகளைப் பணித்துள்ளார். இது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர் விமல் குணரத்ன தெரிவிக்கையில்:-

வாரத்தில் இரண்டு நாட்கள் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு வலயக் கல்விக் காரியாலய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதேவேளை டெங்கு நோய்
பற்றியும் டெங்கு ஒழிப்பு செயற்பாடு தொடர்பிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக் கப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திலுள்ள பெருமளவு பிரதேசங்கள் டெங்கு எச்சரிக்கை வலயங்களாகவுள்ளதால் டெங்கு ஒழிப்பு தொடர்பில் பல்வேறு துரித வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகாண சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக