முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்து அரசின் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளராம்! முஸ்லிம்கள் மீதும் அவர்களின் உடமைகள் மீதும் நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களினால் குழம்பிப் போயுள்ள முஸ்லிம் தலைவர்கள் இன்று ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு ஒன்றைக் கோரினர் என்று கூறப்பட்டது.
கண்டியை அடுத்து இன்று பதுளையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்ளவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கு இடையே முஸ்லிம் தலைவர்களைச் சந்திக்க இணங்கினார். அதனையடுத்து அமைச்சர்கள் பௌஸி, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ஆகியோர் விசேட ஹெலிக்கொப்டரில் கொழும்பிலிருந்து பதுளைக்குப் புறப்பட்டுச் சென்றனர் என்றும் - தன்னுடைய நெருக்கடியான நிகழ்ச்சி நிரலுக்கு இடையே இன்று மாலை சுமார் 15 நிமிட நேரம் அவர்களுடன் ஜனாதிபதி உரையாடினார் என்றும் - முற்கொண்டு கிடைத்த செய்திகள் தெரிவித்தன. அப்போதே மேற்படி தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் அறிக்கை ஒன்றை அரசின் சார்பில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார் என்று கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக