வியாழன், 12 ஜூன், 2014

தம்மை குடும்பத்தாருடன் இணைக்கக்கோரி ஈழ அகதிகள் மூவர் உணவுத்தவிர்ப்பு!!

முகாம்களில் உள்ள தமது உறவுகளை விடுவிக்கக் கோரியும், தம்மை உறவுகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக்கோரியும் திருச்சி சிறப்பு முகாமில் மூன்று ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேவரூபன் (27), கேதீஸ்வரன் ( 33), புருசோத்தமன் (29) ஆகிய மூவருமே இவ்வாறு பொராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் கடல்வழியாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதாகி கடந்த ஒரு வருடமாக சிறப்பு முகாமில்
அடைக்கப்பட்டுள்ளார்கள். தமது குடும்பத்தினர் திறந்தவெளி முகாம்களில் வசிக்கின்றனர். நாம் வாழ வழியின்றி இருப்பதனாலேயே விடுதலையை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று அவர்கள் மூவரும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக