திங்கள், 23 ஜூன், 2014

கோப்பாய் கல்வியியற் கல்லூரி கிணற்றிலிருந்து வெடிகுண்டுகள் மீட்பு...!!!!

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து ஒரு தொகுதி வெடிகுண்டுகளை கல்லூரி நிர்வாகம் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளைமோர் குண்டுகள், வாகனங்களுக்கான கண்ணிவெடிகள், ஆர்.பி.ஜி குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் ஆகியன மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார், அவை பழுதடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த 15ம் திகதி தொடக்கம் கல்வியியற் கல்லூரியில் சிரமதானப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் கிணற்றையும் துப்புரவு செய்தபோதே வெடிபொருட்கள் உள்ளே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் கல்லூரியின் நிர்வாகம் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்காத நிலையில், நேற்றைய தினம் கல்லூரியின் அதிபர் கல்லூரிக்கு திரும்பிய பின்னர் இன்றைய தினம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.



இதன் அடிப்படையில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து கிணற்றிலிருந்த வெடிகுண்டுகளை மீட்டிருக்கின்றனர்.

இதேவேளை குறித்த வெடிகுண்டுகள் 1995ம் ஆண்டிற்கு முன்னய காலப் பகுதியை சேர்ந்ததாக இருக்க கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக