வியாழன், 26 ஜூன், 2014

தமிழ் மக்கள் நீதிமன்றங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர் சீ.வி. விக்னேஸ்வரன்...!!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் காணி உரிமை தொடர்பில் சுமார் 2000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் இன்னும் தீர்ப்புகள் வழங்கப்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியில் இந்த முயற்சியை முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வழக்குகளின் தீர்ப்புக்கள் வழங்கப்படாமை காரணமாக பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் தொடர்பான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

18வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சர்வதேச நெருடிக்கடிகளுக்கான குழு வெளியிட்ட அறி;க்கை ஒன்றில், இலங்கையில் தமிழ் சிறுபான்மையினருக்கு உரிமைகள் வழங்கப்படுவதை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் நீதித்துறை தடுப்பதாக குறிப்பிட்டிருந்தமையை விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


தமிழர் பிரச்சினை தீர்வு எனும் போது அதில் தமிழை பெரும்பான்மையாக பேசும் முஸ்லிம்களுக்கும் உள்வாங்கப்படுவர். எனினும், சுயநலம் காரணமாக முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினையை வேறாக்க முனைகின்றனர். எனினும் அளுத்கமை பிரச்சினை அந்த அரசியல்வாதிகளுக்கு பாதகமாக அமைந்துவிட்டது

இதேவேளை எதிர்வரும் ஊவா மாகாணசபை மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை கருத்திற்கொண்டே அரசாங்கம் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற விடயத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக