திங்கள், 30 ஜூன், 2014

3000 தோட்ட தொழிலாளர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகள்...!!!!

பெருந்தோட்ட மக்கள் சுயமுயற்சிகளின் மூலம் தத்தமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான அனைத்து வளங்களையும் பெற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தற்போதைய நிலையில் மூவாயிரம் பேருக்கு சுயமுயற்சி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இவ் உதவிகள் வழங்கப்படுமென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். பதுளை அஞ்சல் நிலைய கேட்போர் கூடத்தில் (28) நடைபெற்ற நிகழ்வொன்றில் உ¨யாற்றிய அவர், “பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளை பாதுகாப்பது அவசியமாகும். இவ்வீடுகள் விடயத்தில் சிலர் செய்யும் தவறுகளினால் அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் களங்கம் ஏற்பட்டு வருகின்றது.


இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள ஜனாதிபதியின் அனுமதியையும் பெற்றுள்ளேன். ஏற்கனவே வழங்கப்பட்ட வீடுகள் விடயத்தில் தவறு இழைத்தவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் அவரவர்களுக்கே உரியதாகும்.

கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை எமது மக்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு எம்மால் வழக்கப்படும் வளங்களைப் பயன்படுத்தி சுயமுயற்சி தொழில் வாய்ப்புக்கள் ஊடாக வளமானதோர் நிலையினை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும் என்றார். சுயதொழில் மூலம் பொருளா தாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் தொழி லாளர்களுக்கு கால்நடைகள் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக