நவீன யுகத்துக்கேற்ப கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் 250 தொழில்நுட்ப பீடங்களை புதிதாக உருவாக்கும் அரசாங்கத்தின் கருத்திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2000 கோடி ரூபா செலவில் நடைமுறைப்படுத்தவுள்ள இந்த செயற்திட்டத்தின் முதற்கட்டமாக நேற்றைய தினம் கொழும்பு ‘லும்பினி’ வித்தியாலயத்தில் முதலாவது தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் ஜனாதிபதியினால்
நாட்டப்பட்டது.
அதேவேளை: நாட்டின் 9 மாகா ணங்களிலும் ஒரே சமயத்தில் தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் அந்தந்த மாகாண ஆளுநர்களினால் நடப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு அம்சமாக 1000 மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்கள் நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் பெரும்பாலான விஞ்ஞான ஆய்வு கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு மாணவர்களுக்குக் கையளிக்கப்பட் டுள்ளது.
கல்வித்துறை தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக எத்தகைய விமர்சனங்கள் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும், காலத்துக்குப் பொருத்தமானதும் தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் எமது எதிர்கால சந்ததியை சிறப்பாக பிரகாசிக்கச் செய்கின்ற நவீன கல்வியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் புதிது புதிதாக பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கின்றது.
அந்த வகையில் தொழில் வாய்ப்பு களைப் பெற்றுக் கொள்வதற்கும் எதிர்கால சுபீட்சத்துக்கும் வழிவகுக்கின்ற தொழில்நுட்ப பீடங்களை அரசாங்கம் உருவாக்கி வருவது மாணவர்கள் மத்தியில் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக