ருகுணு பல்கலைக்கழகத்திற்குள் பொல்லுகள், கம்பிகளுடன் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரியவின் குண்டர்கள் சுமார் 200 பேர், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.
இதனால் பல்கலைக்கழத்தில் இன்று மதியம் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சனத் ஜயசூரியவின் ஆதரவாளர்கள், பல்கலைக்கழகத்திற்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, வெளியில் வந்த பல்கலைக்கழக மாணவர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மத்தியில் சனத் ஜயசூரிய உரையாற்றியிருந்தார்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பல்கலைக்கழகத்தில் நடத்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அரசாங்கம் அதனை கைவிட்டது.
இந்த நிலையில், இன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த சென்ற குழுவினர் இந்த காரணத்தை கூறியே மாணவர்களை தாக்க முயற்சித்துள்ளனர்.
எவ்வாறாயினும், மாத்தறை பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தாக்குதல் நடத்த சென்றவர்களை அங்கிருந்த வெளியேற்றியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் அமைதி நிலவுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக