செவ்வாய், 3 ஜூன், 2014

பணவீக்கம் 3.2 வீதமாக வீழ்ச்சி...!!!!!

மனித உரிமைகளைக் காரணம் காட்டி இலங்கைக்கு வரும் முதலீடுகள் குறைந்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லையென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

உளகளாவிய ரீதியில் 6 மில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கும் அதிகமான கடன் பத்திரங்களில் முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், இவற்றில் 70 வீதத்துக்கும் அதிகமானவை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களைச்

சேர்ந்தவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் காரணமாக வெளிநாட்டு முதலீடுகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லையென்றும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த மே மாதம் இலங்கையின் பணவீக்கம் குறைந்துள்ளது. நுகர்வோர் விலைச் சுட்டியை கொண்டு குடிசன புள்ளிவிபரவியல் திணைக்களம் நடத்திய கணக்கெடுப்பின்படி ஏப்ரல் மாதத்தில் 4.9 வீதமாகக்
காணப்பட்ட பணவீக்கம் மே மாதத்தில் 3.2 வீதமாகக் குறைந்துள்ளது.

2012ஆம் ஆண்டின் பின்னர் குறைந்த பணவீக்க வீதமாக இது பதிவாகியுள்ளது. வருடாந்த சராசரி பணவீக்க வீதம் மே மாதத்தில் குறைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் குறைவான வீதமாக மே மாத பணவீக்க வீதம் அமைந்துள்ளது.

பணவீக்கம் குறைந்ததன் காரணமாக உணவற்ற சில பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உணவற்ற பொருட்களின் உப பிரிவுகளாகவுள்ள வீடமைப்பு நீர் மின்சாரம் வாயு எரிபொருள் போன்ற பொருட்களில் 0.1 வீத வீழ்ச்சி ஏற்படட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக